15749. தேவனுக்கு மகிமை புகழ்ச்சி

1 நம் தேவனுக்கு மகிமை புகழ்ச்சி,
தம் மகனை நமக்காய் தந்தாரே,
அவர் தம் ஜீவனை ஈந்து மீட்டார்,
நாம் மோட்சம் ப்ரவேசிக்க
வாசல் தந்தார்,

பல்லவி:
போற்றுவோம் பாடுவோம்
அவர் சப்தம் கேட்போம்
போற்றுவோம் வாழ்த்துவோம்
மண்ணோர் மகிழ,
நம் ஆண்டவர் கிறிஸ்துவால்
நம்மை மீட்டார்,
எண்ணில்லா நன்மை செய்தார்
போற்றிடுவோம்.

2 அவர் தம் இரத்தத்தால் இரட்சித்தாரே,
தம் வாக்குதத்தம் விசுவாசித்தோர்கு,
மா பாவியாம் பாவியும் மன்னிப்பாரே,
மன்னிப்பீந்து பாவியை இரட்சிப்பாரே, [பல்லவி]

3 வல்லமையான காரியங்கள் செய்தார்,
தம் சொந்த மகனாலே மகிழ்ச்சியே,
நாம் பின்பற்ற நல் வழி காட்டினாரே,
மென்மேலும் மகிழ்வோம்
நாம் மோட்சத்திலே. [பல்லவி]

Text Information
First Line: நம் தேவனுக்கு மகிமை புகழ்ச்சி
Title: தேவனுக்கு மகிமை புகழ்ச்சி
English Title: To God be the glory, great things He has done
Author: Fanny Crosby
Translator: S. John Barathi
Refrain First Line: போற்றுவோம் பாடுவோம்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [நம் தேவனுக்கு மகிமை புகழ்ச்சி]
Composer: William Howard Doane
Key: A♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us