15678. என் வாழ்வின் ஆண்டவர் நீர் தாமே

1 என் வாழ்வின் ஆண்டவர் நீர் தாமே,
வீழ்ந்தே உம் பாதமே அண்டினேன்,
வெள்ளம் போல் சூழ்ந்ததே சோதனை,
நடுங்கும் என்னை காத்திடும்.

2 நண்பர் இல்லார்க்கும் நண்பன் நீர்,
வேறெங்கே வேதனை கூறிடுவேன்,
உம் வாசல் திறந்தே தோன்றுதே,
திக்கற்றோர் ஏழைகள் வரவேற்க.

3 துக்கத்தில் உம்மிடம் புலம்பினோம்,
பக்கத்தில் வந்து நீர் பலம் தர,
உம் வாக்கு என்றென்றும் நிலையன்றோ?
வேண்டுவோர் வேண்டல் வீணாமோ?

4 நீர் தீர்க்கா துயரம் ஏதுமுண்டோ?
கேளாதொழிந்த ஜெபமுண்டோ?
ஜெபத்தைகேட்டு பதில் தந்து,
என் பாரம் யாவும் சுமந்தீரே.

5 எனக்கு நீர் மாத்ரம் போதுமே,
எனக்காய் வாதிடும் வல்லவர் நீர்,
உலகோடிசைந்தோர் அறியாரே,
என்னைப்போல் யார் உண்டவர்கட்கு.

6 மறந்தெரிந்த ஏழை நான்,
ஆனால் என் தேவன் நீர் மறவாமல்,
சேர்த்து காத்து வழி காட்டி,
வாக்கு தந்தீர் என் துணையானீர்.

Text Information
First Line: என் வாழ்வின் ஆண்டவர் நீர் தாமே
Title: என் வாழ்வின் ஆண்டவர் நீர் தாமே
English Title: God of my life, to Thee I call
Author: William Cowper
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [என் வாழ்வின் ஆண்டவர் நீர் தாமே]
Composer: Robert Henry Earnshaw
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us