15654. என் கோட்டையாம் கன்மலை நோக்கி

1 என் கோட்டையாம் கன்மலை நோக்கி,
என் ஆன்மா நம்பி ஏக்கமாய்,
திகிலும் பயமும் எனை சூழ,
இரட்சிப்பிற்காய் காத்து நிற்க.

2 தூயோரும் நம்பி அவரையே,
உள்ளத்தை ஊற்றி காத்திருந்தே,
ஒத்தாசையில்லா பகை சூழ,
ஆண்டவரே எல்லாம் நமக்கே.

3 உலகின் மேலோர் பொய்யரன்றோ?
வீணன்றோ அவரை நம்புதலே,
சீர்தூக்கி பார்ப்பின் சரி சமமே,
பறந்திடும் காற்றன்றோ எவரும்?

4 பொன் பொருளை நம்பிடலாமோ?
மிளிரும் தூசியில் விசுவாசம்?
பறந்திடும் புகை நீ பற்றிடவோ?
ஆண்டவர் வாக்கை நம்பாமல்.

5 அவர் குரல் ஓர்நாள் ஓலித்திட்டதே,
மீண்டும் மீண்டும் கேட்டிட்டதே,
அவர் வல்லமை என்றும் நித்தியமே,
பயந்து நாம் நம்பிட மிக நலமே.

6 அவர் வல்லமை என்றும் தனித்து வரா,
கிருபையும் உடன் வரும் சிம்மாசனம்.
உம் தயவும் நீதி நியாயங்களும்,
பகிரலாமோ? எம் வெகுமதிகள்.

Text Information
First Line: என் கோட்டையாம் கன்மலை நோக்கி
Title: என் கோட்டையாம் கன்மலை நோக்கி
English Title: My spirit looks to God alone
Author: Isaac Watts
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [என் கோட்டையாம் கன்மலை நோக்கி]
Composer: John Warrington Hatton
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us